ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே இளைஞர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கவுன்சிலர் கணவர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அம்மனூர் பகுதியை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் அஸ்வினியின் கணவர் சுதாகர் தாக்கப்பட்ட வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த அவினேஷ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிபந்தனை ஜாமின் வெளி வந்த அவினேஷ் ரத்தினகிரி காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்தபோது 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய கவுன்சிலர் கணவர் சுதாகர் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.