ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்ட மலைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆதரவுடன் ரகசியமாகச் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் வகையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஆப்ரேஷன் அசல் என்ற அதிரடி நடவடிக்கையைப் பாதுகாப்புப் படை தொடங்கியுள்ளது.
அதன்படி பாதுகாப்புப் படையினர் குல்காம், கிஷ்த்வார் மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தின் மலைப் பகுதியான துள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.