மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேரணியில் பங்கேற்றனர்.
வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரியும், கால்வாய் மதகு பகுதியை 65 அடியாகக் குறைக்க வலியுறுத்தியும் உசிலம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வணிகர் சங்கத்தினர் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வரும் நிலையில் பாஜக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளும், வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது தண்ணீர் திறந்துவிட வேண்டும், விவசாயிகளுக்குத் தேவையான பாசன கால்வாயை அமைத்துத் தரவேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேவர் சிலை வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.