கோவை விமான நிலையத்தில் உயர் ரக கஞ்சா கடத்தி வந்ததாகக் கேரளாவைச் சேர்ந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கேரளாவைச் சேர்ந்த ஃபஹத் மோன் முஜீப் மற்றும் சுஹைல் உபைதுல்லா ஆகியோர் ஹைட்ரோபோனிக்ஸ் வகை கஞ்சாவைக் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர்களிடம் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான மதிப்பிலான ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.