ஆஸ்திரேலிய ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட் டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
4 நாள் பயணமாக ஆஸ்திரேலிய ராணுவ தளபதி சைமன் ஸ்டூவர்ட் இந்தியா வருகை தந்துள்ளார். அமெரிக்க ராணுவ கல்லூரியில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதியுடன் இணைந்து பயிற்சி பெற்ற இவர், இரு தரப்பு ராணுவ உறவு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் டெல்லி வந்தடைந்த அவருக்கு இந்திய ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர். தொடர்ந்து போர் நினைவிடம் சென்ற சைமர் ஸ்டூவர்ட் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.