தேர்தல் தோல்வி பயம் காரணமாகத் தாயுமானவர் திட்டத்தை தற்போது திமுக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தியாகராய நகரில் அவர் அளித்த பேட்டியில்,
திமுக தோல்வி பயத்தில் உள்ளது என்றும் திமுக 200 தொகுதிகளில் தோற்கும் என்று நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறினார்.
ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் கழித்து தாயுமானவர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தோல்வி பயம் காரணமாகத் தாயுமானவர் திட்டத்தை இப்போது நடைமுறைப்படுத்தியனர் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளைச் சொந்த கட்சிக்கு வேலை வாங்குகிறார்கள் என்றும் போதைப்பொருள் புழக்கம் அதிகமானது தான் தமிழகத்தில் கொலைகள் நடப்பதற்குக் காரணம் என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.