உலகில் வேகமாக முன்னேறி வரும் ஒரே பொருளாதாரம் இந்திய பொருளாதாரம் என ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உலகில் மிகவும் சக்திவாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதாகவும் கூறினார். மேலும் இந்தியப் பொருளாதாரத்துடன் வேறு எந்த நாடும் போட்டியிட முடியாது என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.