கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“ஜின்னா ஸ்பெஷல் நெய் பொடி” என்ற பெயரில் தனியார் நிறுவனம் ஒன்று சிறிய அளவிலான ஆலை அமைத்து புகையிலை பொருட்களை உற்பத்தி செய்து, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் விற்பனை செய்வதாகவும், இதனால், மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.