விடுதலைக்கு இரண்டு நாட்களுக்கு முன், தேசப் பிரிவினையில் இஸ்லாமிய வன்முறைகள் என்னும் அதிகரிக்கத் தொடங்கின. எல்லைப் புற மாகாணங்களிலிருந்து வரும் ரயில்களில் இந்துக்களின் பிணங்களே இந்தியாவுக்கு வந்த விழுந்தன. அந்த கோரச் சம்பவங்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரியாஜாபாத் என்ற லாகூருக்கு முந்தைய ரயில் நிலையத்தில், காலை 11 மணி அளவில் கையில் கத்தி, வாள் உட்படக் கொலை ஆயுதங்களுடன் சுமார் 200 முஸ்லீம் பயங்கரவாதிகள் நின்று கொண்டிருந்தனர். ஸ்டேஷன் மாஸ்டர் தன் அறையைப் பூட்டிக்கொண்டு, உள்ளேயே உயிருக்குப் பயந்து ஒளிந்திருந்தார்.
மெதுவாக ரயில் வந்து நின்றதும் அல்லா ஹூ அக்பர் என்று கோஷமிட்ட முஸ்லீம் பயங்கரவாதிகள், ரயில் பெட்டிகளில் இருந்த இந்துக்களை வெளியே இழுத்து கழுத்தை அறுத்துக் கொன்று எறிந்தனர். இந்து பெண்களையும், சிறுமிகளையும், முஸ்லீம் பயங்கரவாதிகள் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.
1619-ல் குரு ஹரிகோவிந்த் சிங்ஜி, திவான் சந்த் உடன் லாகூருக்கு வந்தார். அவர் எங்கு தங்கி இருந்தாரோ அந்த இடத்தில் தான் சீக்கியர்களுக்குப் புனிதமான மோஜங் குருத்வாரா கட்டப்பட்டது. மாலை 4 மணிக்கு, முஸ்லீம் நேஷனல் கார்டு அமைப்பினர், மோஜங் குருத்வாராவுக்குள் வெடி குண்டு வீசினார்கள்.
50க்கும் மேற்பட்ட முஸ்லீம் பயங்கர வாதிகளை எதிர்த்துச் சண்டையிட்டு, நான்கு சீக்கியர்கள் வீரமரணம் அடைந்தனர். மகாராஜா ரஞ்சித் சிங் கட்டிய இந்த சேவின் பாதஷாஹி குருத்வாரா ஒரு பாவமும் அறியாத சீக்கியர்களின் ரத்தத்தில் உறைந்தது.
இதற்கிடையே, கல்கத்தாவில், சோடேபூரி ஆசிரமத்தில் இருந்து ஹைதரி மஞ்சிலுக்கு, ஷேவர்லே காரில் காந்தி வந்தார். காந்தியின் கார் வந்து நின்றதும், கூடியிருந்தவர்கள், “காந்தியே திரும்பி போ என்றும், நவகாளிக்குச் சென்று இந்துக்களைக் காப்பாற்று என்றும், முதலில் இந்துக்களின் உயிருக்கு உத்தரவாதம் கொடு பிறகு முஸ்லீம்களுக்குத் தனி நாடு கொடு” என்றும் கோஷங்கள் எழுப்பினார்கள். காந்தியின் கார் மீதும் கல் பாட்டில்கள் வீசப்பட்டன.
பேலியாகாட்டில் இருந்த படியே நவகாளி இந்துக்களைக் காப்பாற்றுவேன் என்று கூறிய காந்தி, கல்கத்தாவில் உள்ள முஸ்லீம்கள் மீது ஒரு துரும்பும் விழக்கூடாது என்று தெரிவித்து விட்டு உள்ளே சென்றார். அப்போது 5000 இந்துக்களைக் கொன்ற ஷஹீத் சுராவர்த்தி வந்தார். அவர் மீதும் கற்கள் வீசப் பட்டன.
ஒன்றுபட்ட பாரதத்தில் அனைவராலும் மதிக்கப்பட்ட காந்தியின் வாழ்வில் இப்படி ஒரு அவமதிப்பு நடப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு, பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது மட்டும் இன்றி, இந்துக்களைக் கொல்லும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நின்றதும் தான் காரணங்களாகும்.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் தேதி, பாகிஸ்தான் சுதந்திர தினத்தின் முதல் மாலை நேரம். கராச்சியில் இரவு மது விருந்துக்கு ஜின்னா ஏற்பாடு செய்திருந்தார். வெளிநாட்டுத் தூதர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
ஆங்கிலேயச் சக்கரவர்த்தியின் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கைக்காக இந்த மதுவிருந்தை அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறி ஜின்னா, மது விருந்தை தொடங்கி வைத்தார்.
அன்று இரவு சரியாக 12 மணிக்கு, அஸ்லாமு அழைக்கும். PAKISTAN BROADCASTING SERVICES உங்களை வரவேற்கிறது நாங்கள் லாகூரில் இருந்து பேசுகிறோம். சுதந்திர தின காலையில் பாகிஸ்தான் அதிகாரப் பூர்வமாக உதயமானது.