சென்னை மாமல்லபுரத்திற்கு வருகை தந்த கியூபா நாட்டு தூதர், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை பார்வையிட்டார்.
கியூபா நாட்டு தூதர் யுவான் கர்லோஸ் மார்சன் அகிலேரா மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். அவர் புராதன சின்னங்களை பார்வையிட்டு ரசித்ததோடு, புகைப்படங்களையும் எடுத்து மகிழ்ந்தார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தமிழக மக்களின் வாழ்வியல் முறை, கலை, கலாசராம், பாரம்பரியம் ஆகியவை மிகவும் பிடித்துள்ளதாகவும், மாமல்லபுரம் சிற்பங்கள் அற்புதமாக, அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.