நெல்லை அம்பாசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா கோயிலில் 5-ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் 354-வது குருபூஜை நடைபெற்றது.
விழாவில் ராகவேந்திர சுவாமிக்கு தயிர், பால், இளநீர் உள்ளிட்ட 5 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஆராதனை விழா மற்றும் குருபூஜையில் கலந்துகொண்ட நடிகர் நிழல்கள் ரவி மற்றும் அவரது மனைவிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது.