உத்தரபிரதேசத்தில் போலி காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் போலியாக சர்வதேச போலீஸ் மற்றும் புலனாய்வு அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதைக் கண்டுபிடித்த போலீசார் போலியாக காவல் நிலையம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிபாஷ் சந்திரா அதிகாரி அவரது மகன் அர்க்யா உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பிபாஷ் சந்திர அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மூத்த நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஏற்கனவே ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.