வர்த்தகப் பதற்றம் நிலவிவரும் சூழலில், அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி அதிபர் டிரம்பை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் செப்டம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உலக தலைவர்கள் பங்கேற்கும் நிலையில், ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்க செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது இந்திய – அமெரிக்க உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ட்ரம்ப்பை தவிர, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களுடனும் பிரதமர் மோடி உயர்மட்ட சந்திப்புகளை நடத்துவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.