பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவரை, ஆதார் கார்டு இல்லாததால், பள்ளியை விட்டு வெளியே அனுப்பியது குறித்து தான் கேள்வி எழுப்பியுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மாணவரைப் பள்ளியில் சேர்க்க மறுத்தார்கள் என்று எங்குமே கூறப்படவில்லை. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவரை, ஆதார் கார்டு இல்லாததால், பள்ளியை விட்டு வெளியே அனுப்பியது குறித்து தான் கேள்வி எழுப்பியிருக்கிறோம், இதையேதான் மாணவரின் பெற்றோரும் கூறுகின்றனர். இந்தச் செய்தியை வெளியிட்ட உங்கள் குடும்ப ஊடகமான தினகரனும் கூறியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
எனவே இந்த காலாவதியான, கருணாநிதி காலத்து வார்த்தை விளையாட்டுக்களை நிறுத்திக் கொள்வது நல்லது. திமுக குடும்பத்துக்குள்ளே பிரச்சினை இருந்தால் அதை அவர்கள் பேசித் தீர்த்துக் கொள்ளட்டும். அதற்கும் மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கிய தகவல் சரிபார்க்கும் அமைப்பைப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்