சட்டம் – ஒழுங்கை பற்றி கேள்வி கேட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் பம்மி பதுங்கிக் கொள்வது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் எனவும் செய்திகள் வருகின்றன என குறிப்பிட்டுள்ள இபிஎஸ், வெடிகுண்டு சம்பவத்தை நியாயப்படுத்த நினைத்தால் திமுக அரசு வெட்கித் தலை குனிய வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், சட்டம் – ஒழுங்கை பற்றிக் கேள்வி கேட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள இபிஎஸ், நாட்டு வெடிகுண்டு விவகாரம் தொடர்பாக திமுக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் அவர் வலியுறுத்தினார்.