கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே மகன் வீட்டைவிட்டு விரட்டியதால் தங்களை கருணைக்கொலை செய்யக்கோரி முதிய தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுகிருஷ்ணன், ராஜேஸ்வரி தம்பதியருக்கு, மனநலம் குன்றிய மகள் ஒருவர் உள்ளார்.
இந்த நிலையில், தம்பதியரின் மகன், சொத்துகள் அனைத்தையும் அபகரித்துவிட்டுப் பெற்றோர் மற்றும் சகோதரியை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
இதனால் வேதனையடைந்த தம்பதியர், தங்கள் 3 பேரையும் கருணைக்கொலை செய்ய வேண்டுமெனக் கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்துள்ளனர்.