ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்மநபரின் சிசிடிவி வைரலாகி வருகிறது.
அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து திருடுபோனதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி போல் நடித்து யாசகம் பெற வரும் நபர், பள்ளி ஆசிரியர்களிடம் இருந்து பொருட்களைத் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மர்ம நபரை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.