திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நிலப்பிரச்னை காரணமாக, அண்ணனை அரிவாளால் சரமாரியாக வெட்டிய முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
கட்டக்கூத்தன்பட்டியை சேர்ந்த பொன்னையாவுக்கும், அவருடைய தம்பியும், முன்னாள் ராணுவ வீரருமான சங்கனுக்கும் இடையே நில பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நில பிரச்சனை தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, சங்கன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பொன்னையாவை சரமாரியாக வெட்டி உள்ளார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பொன்னையாவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சங்கனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.