பீகாரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் ஓடும் காரில் இருந்த படிப் பணத்தை விநியோகித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கனமழை வெள்ளத்தால் புர்னியா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரம் முடங்கியது. இந்நிலையில் அங்குச் சென்ற எம்பி பப்பு யாதவ் ஓடும் காரில் அமர்ந்தபடியே மக்களுக்குப் பணத்தை விநியோகித்துள்ளார்.
இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில் பப்பு யாதவ்வின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.