ஆந்திராவில் வீட்டின் குளியலறையில் பதுங்கி இருந்த 16 அடி நீள ராஜநாகத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திராவின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள கிச்சடாவில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் ராஜநாகம் ஒன்று பதுங்கி இருந்ததால் அதனைக் கண்ட வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து பாம்பு பிடிப்பவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்புபிடி வீரர்கள் 16 அடி நீள ராஜநாகத்தைப் பிடித்துச் சென்றனர்.