பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் திமுக நிர்வாகியின் மனைவி, திட்டமிட்டே ஆளுநரை அவமதித்தது அம்பலமாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டம் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது மாணவி ஒருவர், தனது பட்டத்தை ஆளுநரிடம் வழங்காமல் துணைவேந்தரின் கையில் வழங்கி பெற்றுச் சென்றார்.
இந்த சம்பவம் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், ஆளுநரை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட மாணவி, நாகர்கோவில் திமுக மாநகர துணை செயலாளர் ராஜனின் மனைவி ஜீன் ஜோசப் என்பது தெரியவந்துள்ளது.
திட்டமிட்டு ஆளுநரை அவமதித்து கல்வியிலும் அரசியலைப் புகுத்தியதாகக் கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், மாணவியை UGC விசாரணைக்கு உட்படுத்த பல்கலைக் கழக கமிட்டி ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.