ராஜஸ்தான் மாநிலத்தில் பிக் அப் வாகனம், கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
தவுசா மாவட்டத்தில் உள்ள பாபி கிராமத்திற்கு அருகே கதுஷியாம் கோயிலுக்கு சென்றுவிட்டு பிக்அப் வாகனத்தில் பக்தர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
தவுசா – மனோஹர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பிக் அப் வாகனம் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 7 வயதுடைய குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ஜெய்ப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.