பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடந்த 2014 ஆம் ஆண்டு காரத்தே பயிற்சியாளர் கெபிராஜிடம் தற்காப்பு கலை பயிற்சி பெற்று வந்தார்.
அப்போது ஜூடோ போட்டிக்காக மாணவியை நாமக்கல் அழைத்துச் சென்று கெபிராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி 7 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 2021-ல் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து 2021 ஜூன் மாதம் கெபிராஜை கைது செய்தனர்.
தொடர்ந்து காரத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீது மேலும் சில மாணவிகள் புகாரளித்த நிலையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காரத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து
சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.