போக்சோ சட்டத்தில் பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாமனார் மீது பெண் புகார் அளித்ததாகவும், இந்த வழக்கு விசாரணையில், மாமனார் மீது உண்மைக்கு மாறாகப் பெண் புகார் அளித்தது தெரியவந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு உரியத் தண்டனை வழங்கும் நோக்கத்துடன் போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால், போக்சோ சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பொய் புகார் அளிப்பவர்கள் மீது பிரிவு 22(1)ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.