சுதந்திர தினத்தையொட்டி திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் 15-ம் தேதி நாட்டின் 79-வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. இதனால் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தி 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோல திருச்சி ரயில் நிலையம் மற்றும் நகரின் முக்கிய பேருந்து நிலையங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.