கர்நாடகாவில் ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள ஏடிஎம்மை திருடன் ஒருவன் உடைக்க முயன்றுள்ளான்.
அப்போது அங்கு ரோந்து வந்த போலீசார் ஏடிஎம் மையத்தில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து உடனடியாக ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது கொள்ளையன் ஒருவன் ஏடிம்மை உடைக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை கையும் களவுமாகப் பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஏடிஎம்மை உடைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.