பீகாரில் தொடர் கனமழை காரணமாக துட்லா பவானி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
பீகார் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் ரோஹ்தாஸில் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதனால் துட்லா பவானி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த ரம்மியமான காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். இதேபோல் தலைநகர் பாட்னாவிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. கேதன் மார்க்கெட் பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.