திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது சாதனைப் பயணத்தின் HIGHLIGHTS இதோ.
பலர் அதிசயங்களை நம்புவதில்லை… ஆனால் அதிசயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன… சாதாரண பேருந்து நடத்துநர் பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்துகொள்வது அதிசயம்தான்” என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னார் ரஜினிகாந்த். தமது வளர்ச்சி ஒரு அதிசயம் என்று அவர் சொன்னாலும் அதற்குப் பின்னால் கடும் உழைப்பும் பெரும் திறமையும் அடங்கியிருக்கிறது.
ஒருவர் காலில் அணிந்திருக்கும் SHOE தானே கழன்று சென்று எதிரியை அடித்துவிட்டு மீண்டும் காலிலேயே வந்து மாட்டிக்கொள்கிறது என்றால் அதை ரஜினிகாந்த் செய்தால் மட்டுமே தமிழக மக்கள் ஒத்துக்கொள்வார்கள். அந்தளவுக்கு LARGER THAN LIFE கதாபாத்திரங்களில் ரஜினியை ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள்.
பரட்டையாக ரஜினி பற்ற வைத்த நெருப்பு அரை நூற்றாண்டாக எரிந்து கொண்டிருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தில் ரஜினி காட்டிய VARIETY-ஐ முழுநேர வில்லன்களிடம்கூட பார்க்க முடியாது. ரஜினிக்குக் காதல் வராது… காமெடி வராது… அவருக்கு நடிக்கத் தெரியாது என்று ஒரு கூட்டம் இன்றும் சொல்லிக்கொண்டிருக்கிறது. திரைத்துறையைப் பற்றியும், தம்மைப் பற்றியும் எதுவும் தெரியாமல் பேசும் அந்தக் கூட்டத்தை ரஜினி கண்டுகொள்வதே இல்லை.
அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாகச் செய்யும் திறமை இருந்தாலும் COMMERCIAL பாதையைத் தேர்ந்தெடுத்தார் ரஜினி. அவர் திரையில் வந்தாலே போதும், பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை என்ற நிலையிலும் தமது ஸ்டைலாலும் மெனக்கெடலாலும் கதாபாத்திரங்களை வேறுபடுத்திக் காட்டினார்.
“ரஜினிக்கும் வயதாகிவிட்டது அவரது ரசிகர்களுக்கும் வயதாகிவிட்டது இனி அவர் அவ்வளவுதான்” என ஆண்டுக்கணக்காகச் சிலர் கூறி வருகிறார்கள். “வெறுப்பென்னும் நெருப்பில் வளர்ந்த செடி நான்” என HATERS-க்கு பதில் சொல்லிவிட்டுத் தனி வழியில் ராஜநடை போட்டுக்கொண்டிருக்கிறார் ரஜினி.
‘லேடி சூப்பர் ஸ்டார்’, ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’, ‘காமெடி சூப்பர் ஸ்டார்’ என பலருக்கும் ஏதோ ஒரு வகையில் சூப்பர் ஸ்டார் பட்டம் தேவைப்படுகிறது. சில நடிகர்களின் ரசிகர்கள் தங்களது ஆதர்ச நாயகன்தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் என்று பேசி வருகிறார்கள்.
இதில் ஒரு நகைமுரண் என்னவென்றால் 90-ஸ் பேட்ச் நடிகர்களில் ஒருவர் ரஜினி பட டைட்டிலை பயன்படுத்தியும், மற்றொருவர் ரஜினி பட ரீமேக்கில் நடித்தும் முன்னுக்கு வந்தவர்கள். ரஜினிகாந்தை வைத்து படமெடுத்த எந்த தயாரிப்பாளரும் கம்பெனியை மூடிவிட்டுச் சென்றதில்லை.
ஒருவேளை படம் தோல்வி அடைந்தால் அந்த தயாரிப்பாளருக்கு உதவ ரஜினி தவறியதே இல்லை. ‘பாபா’ படம் எதிர்மறையான வசூலைப் பெற்றபோது விநியோகஸ்தர்களை அழைத்து பணத்தைத் திருப்பிக்கொடுத்தவர் ரஜினிகாந்த்.
அன்றும் சரி இன்றும் சரி… சில திரைத்துறைகள் ரஜினி படத்தைத் தாண்டி வசூலித்திருக்கின்றன. ஆனால் எந்த நாயகனும் நம்பர் ஒன் இடத்தில் நீடித்ததே இல்லை. 50 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் நாற்காலியில் அமர்ந்திருப்பது ரஜினி மட்டும்தான். BOX OFFICE-ல் பட்டையைக் கிளப்பாவிட்டால் இது சாத்தியமில்லை.
ஒவ்வொரு படமும் எவ்வளவு வசூலிக்கிறது? அதில் தயாரிப்பாளருக்கு எவ்வளவு லாபம்? விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் எவ்வளவு வருவாய் ஈட்டினார்கள்? என்ற உண்மை தெரிந்தவர்களுக்கு யார் நம்பர் ஒன் என்பது புரியும்.
சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்படும் ரஜினிகாந்த், YOUNG MAN-ஆக… EVER MAN-ஆக… இந்திய சினிமாவின் POWER HOUSE-ஆக அரை நூற்றாண்டைத் தாண்டி அசத்திக்கொண்டிருக்கிறார்.