சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அடுத்த வாரம் இந்தியா வர உள்ள நிலையில் இரு நாடுகள் இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் நடந்து வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார்.
இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார். அப்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து எல்லைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும் பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.