துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட, தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், துணை வேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் நடைமுறை பல்கலைக்கழக மானியக் குழு நெறிமுறைகளுக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
துணை வேந்தர்கள் நியமனம் தாமதமாவதற்கு ஆளுநர் காரணம் அல்ல, தமிழக அரசே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி விதிகளுக்கு மாறாக தேடுதல் குழு அமைக்கப்பட்டதால் வேந்தர் என்ற அடிப்படையில் ஆளுநர் தலையிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் துணை வேந்தர் நியமன விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.