ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையில் ஓரமாக இருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்தவர் வைரமுத்து. இவர் ஈரோட்டில் உள்ள நண்பரை பார்த்து விட்டு கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தாமரை பாளையம் பகுதி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த கணேசன் என்பவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களும் சேதமடைந்தன.