தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், வரும் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது.
மாநாட்டுத் திடலில் பிரம்மாண்ட விழாமேடை, விஜய் நடந்து சென்று தொண்டர்களைச் சந்திப்பதற்கான நடைமேடை, பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் இடத்தில் தடுப்பு வேலிகள், முகப்பு ஆர்ச், மின்விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், மாநாட்டுத் திடலைச் சுற்றி பார்க்கிங் அமைக்கும் பணிகளும், குடிநீர் வழங்க 100க்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.