திமுகவினருக்கு ஆதரவாகச் செயல்படும் ஓமலூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான முத்துக்குமார் கடந்த மாதத்தில் அனுமதியின்றி நெடுஞ்சாலை ஓரத்தில் குழி வெட்டிக் கொண்டிருந்தார்.
அதுகுறித்து கேள்வி எழுப்பிய நபர்களை தாக்கிய முத்துக்குமார், தான் தாக்கப்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
இதுதொடர்பாக ஓமலூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், திமுகவினருக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து தாக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மாநகர காவல் ஆணையரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.
அப்போது போதைப்பொருட்கள் விற்பனை குறித்துப் புகாரளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.