இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
சிம்லாவின் கோட்காயில் உள்ள கல்தூனாலாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாகப் பல வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் ஒரு சில வாகனங்கள் வெள்ளத்தால் இடிபாடுகளுக்குள் புதைந்தன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாகச் சிம்லா நால்தேரா சாலை மூடப்பட்டுள்ளது.
இதனிடையே சிர்மௌர் பகுதியில் ஆப்பிள்களை ஏற்றிச் சென்ற லாரி ஷாலேச் பாலம் அருகே பஸெட்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ஓட்டுநர் வெளியே குதித்து உயிர் தப்பினார்.