சென்னை பூந்தமல்லி அருகே ராட்வீலர் நாய் கடித்ததில் ஒருவரின் மூக்கு துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த காவல்சேரி பகுதியில் ஒருவர் சொந்தமாக வீடு கட்டி வரும் நிலையில், கட்டுமான பொருட்களைப் பாதுகாக்க ராட்வீலர் உட்பட 4 நாய்களை கட்டி வைத்துள்ளார்.
கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் கணேஷ் என்பவர் நாய்களுக்கு உணவளித்துப் பராமரித்து வந்த நிலையில், திடீரென ராட்வீலர் நாய் கடித்துக் குதறியதில் அவரின் மூக்கு துண்டானது. உடனடியாக அங்கிருந்தவர்கள் கணேஷை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.