ஈரோடு மாவட்டம் புதுப்பாளையம் குருநாத சுவாமி கோயில் தேரோட்ட விழாவையொட்டி, கால்நடை சந்தை களைகட்டியது.
புதுப்பாளையத்தில் உள்ள குருநாத சுவாமி கோயில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் கால்நடை சந்தை தென்னிந்தியாவிலேயே புகழ்பெற்றது ஆகும்.
அந்த வகையில் நடப்பாண்டும் உயர் ரக மார்வார், கத்தியவார் குதிரைகள், புகழ்பெற்ற ஓங்கோல், காங்கேயம் காளைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அரங்குகளில், கால்நடைகளுக்கான பிரத்யேக அணிகலன்களும் விற்பனை செய்யப்பட்டன. 1 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரையிலும் விலை நிர்ணயிக்கப்பட்ட கால்நடைகளைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.