கோவை மாவட்டம் சூலூர் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் உயிரிழந்தார்.
காடாம்பாடி பகுதியில் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். ஓய்வு பெற்ற விமானப்படை வீரரான இவர் தனது மனைவியை அலுவலகத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்துள்ளார்.
சூலூர் விமானப்படைத் தளம் அருகே வளைவில் திரும்பிய போது எதிரே வந்த கார் மோதியதில் ஹரிஹரன் பரிதாபமாக உயிரிழந்தார்.