செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கிடப்பில் போடப்பட்ட நடைமேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
சிங்கபெருமாள் கோவில் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி பாதசாரிகள் சிரமமின்றி நடப்பதற்காக நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கின.
ஆனால், கனமழை காரணமாக பணிகள் கிடப்பில் போடப்பட்டதையடுத்து தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. மேலும், நடைபாதை முற்றிலுமாக சரிந்ததால், அருகேயுள்ள கடைகள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சியளிக்கின்றன.
இருப்பினும் ஆபத்தை உணராத மக்கள், அவ்வழியாகக் கடைகளுக்கு நடந்து செல்கின்றனர். உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதால், நடைபாதையைச் சீரமைத்துத் தர வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.