கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மர்மநபர் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பெங்களூருவின் டிஜே ஹல்லி பகுதியில் அதிகாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனால் அங்கிருந்த 2 இரு சக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.