1857-ல் நடந்த ‘சிப்பாய் கலக’த்துக்கு 102 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மண்ணில் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்ட பாளையத் தளபதி தான் ஒண்டிவீரன்.
1710 ஆம் ஆண்டு பிறந்த ஒண்டிவீரன், தந்தை மறைவுக்குப் பின் நெற்கட்டும் சேவல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பிறகு, பூலித் தேவரின் பாளையத்தில், படைத்தளபதியாக,காவல் தெய்வமாக இருந்து, ஆங்கிலேயருக்கு எதிர்த்து பல போர்களை நடத்தி, வெற்றி வாகை சூடியுள்ளார்.
பூலித்தேவர் வரி கொடுக்க மறுத்த காரணத்தால் ஆங்கிலேயேர்கள், 1755 ஆம் ஆண்டு,நெல்லை சீமை மீது போர் தொடுத்தனர்.
2000 வீரர்களுடன் கூடிய கம்பெனி பெரும்படை நெற்கட்டும் சேவலை முற்றுகை இட்டது. சாதாரண கூலித் தொழிலாளியாக கம்பெனி படைமுகாமில் ஊடுருவி தகவல்களைச் சேகரித்தான்.
பட்டத்து வாளை எடுத்து தனது இடுப்பில் சொருகிக் கொண்டு,குதிரையைக் கிளப்ப முயன்ற போது ,குதிரை ஒத்துழைக்க மறுத்து கனைத்து ஓடியது. சத்தம் கேட்டு வீரர்கள் ஒடிவந்தனர். தன்னைப் பாதுகாத்து கொள்ள குதிரைக்குத் தீனி போடுகின்ற காடியில் பதுங்கிக் கொண்டான்.
மீண்டும் குதிரையை காடி பக்கத்திலேயே கட்டுவதற்காக, கம்பெனி வீரர்கள், ஒரு ஈட்டியைத் தரையில் அறைந்தபோது, ஒண்டிவீரனின் கையும் சேர்த்து தரையில் அறையப் பட்டது. உயிர்வலியைப் பொறுத்துக் கொண்ட ஒண்டி வீரனால்,,ஈட்டியில் இருந்த தனது கையை பிடுங்க முடியவில்லை.
மீண்டும் குதிரை கனைத்து விட்டால்,காரியம் கெட்டுவிடும் என்பதால்,தனது கையைத் தானே வெட்டிக் கொண்டு,வெண்கல மணியை ஒலிக்கச் செய்து விட்டு குதிரையில் ஏறி மின்னலென பறந்து மறைந்தார்.
அபாய ஒலி என்று கம்பெனி படைகள் அவசர அவசரமாக பீரங்கியின் மூலம்,தாக்குதல் நடத்தினர். அந்தப் பீரங்கி குண்டுகள் அவர்கள் படைகளையும்,கூடாரங்களையும் ,ஆயுத கிடங்குகளையும் தாக்கி அழித்தது.
தேசத்தின் நலனுக்காக தனது ஒரு கையை மட்டுமல்ல,உயிரையும் தர தயங்காத ஒண்டிவீரன், எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாக நின்று, தனது நாட்டையும் மக்களையும் பாதுகாத்தார்.