தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரித்து வருகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுதந்திர தின உரையில், அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையால் சக்தி படைத்தவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 33 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,
தமிழகத்தில் அதிகளவிலான இளைஞர்கள் தற்கொலை செய்வது கலங்கச் செய்கிறது எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் தற்கொலை செய்து கொள்வோரின் சராசரி இருமடங்கு அதிகம் எனவும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.