ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பணியாற்றிய 36 விமானப்படை வீரர்களுக்கு வீர தீர விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகக் கடந்த மே 7-ம் தேதி இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பணியாற்றிய 36 விமானப்படை வீரர்களுக்கு வீர தீர விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதில், 9 பேருக்கு வீர் சக்ரா விருதும், ஒருவருக்கு சௌர்ய சக்ரா விருதும், 26 பேருக்கு வாயு சேனா பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பணியாற்றிய வீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.