ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சஷோதி பகுதியில் மேகவெடிப்பு காரணமாகப் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. கற்கள் மற்றும் மண்ணுடன் வெள்ளம் அடித்து வரப்பட்டதால் ஏராளமான கட்டடங்கள் நொறுங்கி மண்ணுக்குள் புதைந்தன.
மச்சைல் மாதா யாத்திரை சென்றவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதேபோல் பூஞ்ச் பகுதியில் கனமழையால் மெந்தரில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.