ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது.
கிஷ்த்வார் மாவட்டத்தின் சஷோதி பகுதியில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, வானம் பொத்துக்கொண்டு மழையை கொட்டியதால் பெருவெள்ளம் கரைபுரண்டது. அசுர வேகத்தில் பாய்ந்த வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சின்னபின்னமாக்கியது.
மச்சயில் மாதா ஆலயத்திற்கு வந்திருந்த பெரும்பாலான பக்தர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 160-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 38 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் யாத்திரை சென்றிருந்த நிலையில், பலரது நிலைமை என்னவென்று தெரியாததால், உயிரிழப்புக்கு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே இரவு பகலாக தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.