2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
குடியாத்தத்தில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் போது பேசிய அவர், 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்லும் என்பதற்கு இங்கு திரண்டுள்ள மக்களே சாட்சி என தெரிவித்தார்.
தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டியை 18%லிருந்து 12%ஆக குறைத்தது அதிமுக அரசு என்றும், தீக்குச்சிக்கான 5% வரியை ரத்து செய்ததும் அதிமுக அரசுதான் என்றும் கூறினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும், திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை என்றும் அவர் சாடினார்.
தமிழகத்தை கடன்கார மாநிலமாக ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை என்றும் இபிஎஸ் விமர்சித்தார்.