பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்றுச் சான்று ஆப்ரேஷன் சிந்தூர் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது, நாட்டை பாதுகாக்கும்போது எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள நமது ஆயுதப்படைகள் தயாராக உள்ளன என்பதை ஆப்ரேஷன் சிந்தூர் காட்டியது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆப்ரேஷன் சிந்தூர், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் ஒரு வரலாற்றுச் சான்றாக நினைவுகூரப்படும் என கூறியுள்ள திரௌபதி முர்மு,
பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது மற்றும் முற்றிலும் மனிதாபிமானமற்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களை பாதுகாப்பதற்காக பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம் என கூறிய திரௌபதி முர்மு,நம்மைப் பிரிக்க விரும்புபவர்களுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் சரியான பதிலடி அளித்தது எனவும் கூறியுள்ளார்.