தஞ்சை பெரிய கோயிலில் வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, சோதனைக்கு பின் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், புனித தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அந்த வகையில், தஞ்சை பெரிய கோயிலில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. மேலும், கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர்.