இந்தியர்கள் ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் மோடி இந்திய மக்கள் மத்தியில் நாட்டுப்பற்றை அதிகரிக்கும் விதமாக தொடங்கி வைத்த ‘ஹர் கர் திரங்கா’ எனும் இல்லங்கள் தோறும் தேசியக்கொடி ஏற்றும் மாபெரும் தேசபக்தி இயக்கத்தில் பங்கு பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.
இந்தியர்கள் ஒவ்வொருவரும் இதில் பங்கேற்று, தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.