சின்சினாட்டி டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு குடெர்மெடோவா, வர்வரா கிராச்சேவா முன்னேறினர்.
அமெரிக்காவின் சின்சினாட்டியில் நகரில் நடைபெற்று வரும் இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனை வர்வரா கிராச்சேவா, ஜெர்மனியின் எல்லா சீடலுடன் மோதினார்.
இதில் 2-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வர்வரா கிராச்சேவா வெற்றி பெற்றார். முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் ரஷ்யாவின் குடெர்மெடோவா – போலந்தின் மாக்டா லினெட் உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய குடெர்மெடோவா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மாக்டா லினெட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.