ரஷ்யாவில் உள்ள குடியிருப்பு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்திய பதைபதைக்க வைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்யாவின் தெற்கு நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டானில் அடுக்குமாடி கட்டடம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 13 காயமடைந்துள்ளதாகவும், பெல்கோரோட் பகுதியில் கார் மீது உக்ரைன் நடத்திய மற்றொரு ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் காயமடைந்தனர்.